Monday 29th of April 2024 04:45:48 AM GMT

LANGUAGE - TAMIL
இளைஞர் யுவதிகளுக்கான  டிஜிட்டல் குடியுரிமை தொடர்பான பயிற்சி!

இளைஞர் யுவதிகளுக்கான டிஜிட்டல் குடியுரிமை தொடர்பான பயிற்சி!


மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான டிஜிட்டல் குடியுரிமை தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையம் காரியாலயத்தில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் உதவித்திட்ட நிதியுதவியுடன் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிஷேச ஐக்கிய துவ அமைப்பின் அனுசரணையுடன் லிப்ட் அமைப்பினால் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் லிப்ட் அமைப்பின் பொதுச்செயலாளர் திருமதி ஜானு முரளிதரன்,பொருளாளர் திருமதி தர்சினி சுபாஸ்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தற்காலத்தில் மனித சமூகத்திற்கிடையே மிகவும் ஆதிக்கம் செலுத்தும் டிஜிட்டல் தொழில்நுட்பம்,சமூக ஊடகங்களை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்து தொடர்பிலும் அவற்றினை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பிலும் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

லிப்ட் அமைப்பின் வெளிக்கள இணைப்பாளர் தயாநிதி உட்பட வளவாளர்கள் இதன்போது பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் லிப்ட் அமைப்பினால் இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தினை முன்னிட்டு பல்வேறு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

IMAGE_ALT


Category: செய்திகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE